புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்பு வகுப்புகளை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேற்று துவக்கி வைத்தார்.
பின், நிருபர்களிடம் கூறியதாவது: ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்புக்கு, வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு மாத காலத்திற்குள், அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 1,234 ஆய்வக உதவியாளர் பணியிடம், 353 மருந்தாளுனர் பணியிடம் மற்றும் 450 நர்சுகள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
இந்தாண்டு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 38 கோடி ரூபாய் மதிப்பில், 48 பாராமெடிக்கல் பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் முதன்முறையாக, 13 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், எட்டு கோடி ரூபாய் மதிப்பில், பட்ட மேற்படிப்பு துவங்கப்பட உள்ளது.
'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு கேட்ட அனைத்து விபரங்களையும், தமிழக அரசு சமர்ப்பித்து விட்டது. தமிழகத்திற்கு, 'எய்ம்ஸ்' அறிவிக்கப்பட்ட ஒன்று. எனவே, இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...