2017ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் இந்தியாவின் மொபைல் போன் சந்தையில் 27 சதவிகித சந்தைப் பங்குடன் ஜியோ நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
2017ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் பீச்சர் போன் விற்பனையில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஐந்து மடங்கு வளர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் லைஃப் போன் 27 சதவிகித சந்தைப் பங்கைக் கொண்டிருக்கிறது. ஜியோவைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் 14 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பீச்சர் போன் சந்தை, காலாண்டு அடிப்படையில் 36 சதவிகித வளர்ச்சியையும், வருடாந்திர அடிப்படையில் 62 சதவிகித வளர்ச்சியையும் பதிவு செய்திருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட சைபர் மீடியா அறிக்கை கூறுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த பீச்சர் போன் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. முன் பணமாக ரூ.1,500 செலுத்தி வாங்கினால் அத்தொகை மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தப்படும் என்ற அறிவிப்போடு இந்த லைஃப் போன்கள் விற்பனை செய்யப்பட்டன. 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தும் நமது நாட்டில் சுமார் 50 கோடிப் பேர் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளுக்கு மட்டும் இந்த வகையான 2ஜி பீச்சர் போன்களைப் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன்கள் உட்பட ஒட்டுமொத்த மொபைல் போன்கள் விற்பனையில் 21 சதவிகிதப் பங்குகளுடன் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் மட்டும் மொத்தம் 8.8 கோடி மொபைல் போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...