விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலராக
பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்த முதுநிலை
ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு விடைத்தாள்
திருத்தும் முகாம் அலுவலராக மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்)
நியமிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்
சார்பில் 'பட்டதாரி ஆசிரியராக இருந்து டி.இ.ஓ.,க்களானவர்களை முகாம்
அலுவலராக நியமித்தால் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக,' அறிவித்தனர்.
பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியராக இருந்து டி.இ.ஓ.,க்களானவர்கள் முகாம் பொறுப்பாளராக இருப்பது பல ஆண்டு நடைமுறை. மதுரை உட்பட பல மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்களாகவும் உள்ளனர். பதவிக்கு மதிப்பளிக்க வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும், என்றார்.தேர்வு நேரத்தில் ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த
மோதலால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒரு DEO வை பட்டதாரி ஆசிரியர் என்று சொன்னவர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்
ReplyDelete