வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு நிதியுதவி பெறும் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் பாபு (57). இவர் மாணவரை செய்முறை ேதர்வுக்கு செல்லும்படி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர், தலைமை ஆசிரியரை கத்தியால் சரமாரி குத்திவிட்டார். இதில் படுகாயம் அடைந்த தலைமை ஆசிரியர், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் செங்கல்பட்டுக்கு வருகை தந்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை மாணவன் கத்தியால் குத்தியது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். அவர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். கத்திக்குத்துப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமை ஆசிரியருக்கு மருத்துவ செலவாக ரூ.20 லட்சம் அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...