சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும், ஓமியோபதி போன்ற, இந்திய முறை மருத்துவ
படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரி, மத்திய அரசுக்கு
தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ
படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும், 2018 - 19ம் கல்வியாண்டு முதல், நீட்
நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, மத்திய அரசு, 2017ல்
அறிவித்தது.இதுதொடர்பாக, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை
அதிகாரிகள் கூறியதாவது: 'இந்திய முறை மருத்துவ படிப்புக்கு, நீட் தேர்வு
கட்டாயம்' என, மத்திய ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால்,
இந்தாண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, ஆயுஷ் அமைச்சகத்திடம்
வலியுறுத்தி வருகிறோம். அதிலும், சித்த மருத்துவம், தமிழர்களின் பாரம்பரிய
மருத்துவ முறையாகும். அதை, தமிழ் தெரிந்த மாணவர்கள் எளிதில் கற்க முடியும்.
எனவே, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, நீட் நுழைவு தேர்வு கூடாது.
அதிலிருந்து, விலக்கு அளிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு
கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...