ரிலையன்ஸ் ஜியோவுக்குப் போட்டியாக வோடஃபோன் நிறுவனம் தனது ‘வோடஃபோன் ரெட்’ திட்டத்தைப் புதுப்பித்து, அதிக டேட்டா வழங்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான வோடஃபோன், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பிறகு கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து வருகிறது. மேலும், தனது நீண்ட நாள் வாடிக்கையாளர்களையும் ஜியோவிடம் இழந்தது. இதனால் அவ்வப்போது சில சலுகைத் திட்டங்களை அறிவித்து தனது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுவந்த வோடஃபோன், தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் 10 ஜிபி வரையில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதன்படி, வோடஃபோன் ரெட் திட்டத்தில் உள்ள போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள், ரூ.399 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், நேசனல் ரோமிங், 100 எஸ்.எம்.எஸ் மற்றும் மாதத்துக்கு 30 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா பெறலாம். முன்னதாக இத்திட்டத்தில் 10 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதேபோல, ரூ.499 திட்டத்துக்கான டேட்டா வரம்பு 20 ஜிபியிலிருந்து 30 ஜிபியாகவும், ரூ.699 டேட்டா திட்டத்தில் 35 ஜிபியிலிருந்து 40 ஜிபியாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...