மும்பை, : இந்தியாவில், படிக்காதோரை விட படித்த இளைஞர்கள் தான்,
அதிகளவில் வேலையின்றி உள்ளதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.இது
குறித்து, சமூகம் மற்றும் பொருளாதார மாற்ற மைய துணை பேராசிரியர்,
இந்திரஜித் பைராக்கியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:
படிக்காத இளைஞர்களை விட, படித்த இளைஞர்களிடையே
தான், வேலையின்மை அதிகமாக உள்ளது.இது, அவர்கள் கற்ற கல்விக்கேற்ப
உயர்ந்து வருகிறது.எனினும், அத்தகையோருக்கு ஏற்ற ஊதியத்தில் வேலை
கிடைக்காமல் உள்ளதையும் மறுப்பதற்கு இல்லை.வழக்கமான பணி
வாய்ப்புகள், ஒரு வரையறைக்கு உட்பட்ட அளவிற்கே உள்ள போதிலும்,
படித்த இளைஞர்கள் அவற்றையே நாடி, பிற பணிகளை தவிர்க்கின்றனர்.இந்த
போக்கு, வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் அதிகமாக உள்ளது. அங்குள்ள
வேலைவாய்ப்புகளை விட, படித்தோர் அதிகமாக உள்ளதால், போட்டி
காரணமாக, வேலையில்லா திண்டாட்டமும் பெருகி உள்ளது.பெரிய
குடும்பங்களில், படித்த வேலையற்றோர் அதிகம் உள்ளனர். குடும்ப பாரம்
இல்லாததால், அவர்கள் நல்ல வேலையை எதிர்பார்த்து, கிடைக்கும்
வேலையில் அமராமல் காலம் கடத்துகின்றனர்.நடுத்தர வயதினரை விட,
படித்த மற்றும் படிக்காத இளைஞர்களிடையே, வேலையில்லா திண்டாட்டம்
அதிகமாக உள்ளது.தொழிற்பயிற்சி பெற்ற, படித்த மற்றும்
படிக்காதோருக்கு, அமைப்பு சார்ந்த அல்லது சாராத துறைகளில்
வேலைவாய்ப்பு கிடைக்கிறது.இளைஞர்களிடம், தொழில்நுட்பம் மற்றும்
தொழிற்பயிற்சி திறனை அதிகரிக்க, தீவிரமான நடவடிக்கை எடுக்க
வேண்டும். அவ்வாறு செய்தால், படித்தோர் மற்றும் படிக்காதோரின்
வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க முடியும்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...