மாணவர்களின் தேர்வு அச்சத்தை நீக்கி ஊக்குவிக்கும் வகையில்
டில்லியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள்
பலர் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்தகொண்டு மாணவ
மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கேள்விகளுக்கு அவர்
பதிலளித்தார்.
அப்போது, பிளஸ் 1 மாணவர் கிரிஷ் சிங் பிரதமர் மோடியை நோக்கி ஒரு கேள்வி
எழுப்பி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ''பள்ளி மாணவனாகிய எனக்கு பொதுத்
தேர்வு நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு
நீங்கள் தயாராகி விட்டீர்களா?' என கேள்வி எழுப்பினான்.
இதற்கு மோடி பதில் கூறுகையில், '' நான் தாமதமாகவே அரசியலுக்குள்
நுழைந்தேன். அரசியல் சூழ்நிலையில் நான் இருந்தாலும் இயல்பாக நான்
அரசியல்வாதி கிடையாது. அரசியலில் நான் அந்நியனாகவே உணர்கிறேன்.
1.25 கோடி மக்களின் ஆதரவு எனக்கு உள்ளது. எனது ஆற்றலை மக்களுக்கு செலவு
செய்ய வேண்டும். உங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தான் பொதுத்தேர்வு. எனக்கோ
24 மணி நேரமும் தேர்வு தான்'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...