எட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள்
கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி
ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் மடிக்கணினி எல்லாம் கொடுத்து
அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு ஆனால்,மாணவர்களுக்கு
கணினி கொடுத்த அரசு கணினி அறிவியல் பாடம் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை
நியமிக்காமல்இருப்பது ஏன்? இதனால், கணினி அறிவியல் பாடத்தை போதிக்கும் பல
பட்டதாரிஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது இன்று வரை
என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினியில் பி.எட் பயின்ற
ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்குநிகராக அரசுப்பள்ளி மாணவர்களும்உயர
வேண்டும் என்று சமச்சீர் கல்விமுறையை 2011ஆம் ஆண்டுஅறிமுகப்படுத்திய
அரசு.அதில் கணினி அறிவியல் பாடம் முக்கிய பாடமாக கொண்டுவந்து
புத்தகங்களும ் கோடி கணக்கில் அச்சிடப்பட்டு பின் நிறுத்தப்பட்டது காரணம் எதுவும் இன்றி..
சென்ற ஆண்டில்
புதியபாடத்திட்டம் குறித்து ஜகோர்ட்டில் அறிக்கை தாக்கல் :
புதியபாடத்திட்டம் குறித்து ஜகோர்ட்டில் அறிக்கை தாக்கல் :
நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரணைக்கு வந்த போது
மதிப்புமிகு கல்விச்செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் மாநிலத்தின்
புதியபாடத்திட்டம் சிபிஎஸ் பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமையும் வகையில்
6ம் வகுப்பிலிருந்து 10வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை இணைத்து
புதியபாடத்திட்டம் வகுக்க மாநில கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி
மையத்திறக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.இதுவும் கூட பொய்த்து போகுமா ?
அரசுப்பள்ளி மாணவர்களின் புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வர வரைவு அறிக்கை தயார் செய்து
நீதிபதி கிருபாகரன் ஐயா அவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகளால்
வழங்கப்பட்டது. இந்த அறிக்கையும் கூட வெற்று அறிக்கையாக போகுமா? இல்லை வருகின்ற பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படுமா?
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி
ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் 28/7/2017 அன்று முதல்வர் தனிப்பிரிவில்
மனு அளிக்கப்பட்டது அந்த மனுவிற்கு பதில் மனு தந்த முனைவர் K.S.மணி துணை
இயக்குநர் (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) அவர்கள்
கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை கணினி
அறிவியல் பாடத்தில் சேர்ப்பதற்க்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக
கூறினார்.
புதிய வரைவு பாடத்திட்டத்தில் தமிழக கல்வித்துறை மாற்றத்தை
ஏற்படுத்த கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அரசுப்பள்ளியில் கொண்டு
வர நீண்ட நாள் போராடி வரும் 40000 கணினி ஆசிரியர்களுக்கு இந்த
பட்ஜெட்டிலாவது
வாய்ப்பு வழங்குமா மாண்புமிகு தமிழக அரசு.
வாய்ப்பு வழங்குமா மாண்புமிகு தமிழக அரசு.
வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர்
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655 /2014.
மாநிலப் பொதுச்செயலாளர்
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655 /2014.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...