மின்
கட்டண மையங்கள் செயல்படும் நேரத்தை, மாலை, 4:00 மணி வரை நீட்டிக்க, மின்
வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 3,000 பிரிவு
அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், 90 சதவீத அலுவலகங்களில், மின் கட்டண மையங்கள்
செயல்படுகின்றன. அவை காலை, 8:30 மணி முதல் மதியம், 12:30 வரையும்; மதியம்,
1:30 - 2:30 மணி வரையும் இயங்குகின்றன.
அரசு, 'இ - சேவை' மையம், வங்கிகள், தபால் நிலையம், மின் வாரிய இணையதளம் மற்றும், 'மொபைல் ஆப்' வாயிலாக, மின் கட்டணத்தை செலுத்தலாம். இருப்பினும், பலரும், மின் கட்டண மையங்களில் தான், கட்டணம் செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர். மின் பயன்பாடு கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், அபராதத்துடன், மின் கட்டணம் செலுத்தினால் தான், மீண்டும் மின் சப்ளை வழங்கப்படும். அவ்வாறு, அபராதம் செலுத்துவோர், மின் கட்டண மையங்களில் மட்டும் தான், கட்டணத்தை செலுத்த முடியும்.
செலுத்தாத வீடுகளில், மின் இணைப்பு துண்டிக்கும் பணியில், ஊழியர்கள், மதியத்திற்கு மேல் ஈடுபடுகின்றனர். அந்த சமயம், மின் கட்டண மையங்கள் மூடப்படுவதால், நுகர்வோர் அவதிப்படுகின்றனர். இதையடுத்து, மின் கட்டண மையங்கள் செயல்படும் நேரத்தை, மாலை, 4:00 மணி வரை நீட்டிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் கட்டண மையங்களின் நேரத்தை நீட்டிக்கும்படி, நுகர்வோர், ஊழியர் சங்கங்கள் என, பல தரப்பில் இருந்தும், கோரிக்கைகள் வந்துள்ளன. 'இது குறித்து, உயரதிகாரிகள் முடிவு செய்வர்' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...