அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு விண்ணப்பிக்க பெண்கள் பழகுநர் உரிமம்
பெற வசதியாக, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் (ஆர்டிஓ) இன்று
செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன
திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட
ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள்
மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் இலவசமாக வழங்கப்பட்டு
வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 5-ம் தேதிக்குள் மேற்கூறிய
இடங்களில் அளிக்கலாம்.இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்கள் ஓட்டுநர்
அல்லது பழகுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். இதனால் ஆர்டிஓ
அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு விண்ணப்பிக்க பழகுநர் உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பெண்கள் அதிக அளவில் வருகின்றனர். எனவே, இதனைக் கருத்தில் கொண்டு பழகுநர் உரிமம் பெற வசதியாக 3-ம் தேதி (இன்று) அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் செயல்படும். மேலும், பழகுநர் உரிமம் வழங்குவது தவிர்த்து மற்ற பணிகள் ஏதும் ஆர்டிஓ அலுவலகங்களில் இன்று நடைபெறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...