கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க, இரு மாவட்டங்களின் சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் வலியுறுத்தி உள்ளனர்.
மலைவாழ் மாணவர்கள்உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகையில், தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது. ஆனாலும், தமிழக கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்கள், சுற்றுலா சார்ந்த விஷயங்களை
அறியாதவர்களாக உள்ளனர். எனவே, கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை, நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்ல, கோவை, நீலகிரி மாவட்ட சுற்றுலா துறை திட்டமிட்டுள்ளது.
முக்கியத்துவம்இதற்காக, கோவை மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ - மாணவியரை, வால்பாறை, ஆழியாறு, பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கும், நீலகிரி மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ - மாணவியரை, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம், மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தால், நகர்ப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்திராத கிராமப்புற மாணவ - மாணவியர், அவற்றை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்தும், அவர்கள் அறிந்து கொள்வர். எனவே, 'சுற்றுலா துறையும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து, இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களும், பெற்றோரும்வலியுறுத்தி உள்ளனர்.
Yes there are more than 200 students in my school havn't seen SEA yet.
ReplyDeleteYes there are more than 200 students in my school havn't seen SEA yet.
ReplyDelete