ஐஐடி,என்ஐடி,ஐஐஐடி,ஐஐஎஸ்சி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பிஇ, - பிடெக், போன்ற இன்ஜினியரிங், படிப்பில் சேர்வதற்கு, ஜேஇஇ பிரதான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவுத்தேர்வு, மெயின், அட்வான்ஸ்டு என 2 நிலைகளைக் கொண்டது.
அதில், என்ஐடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ மெயின் தேர்வு மதிப்பெண் போதும். ஐஐடியில் சேருவதற்கு மட்டும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு மதிப்பெண் வேண்டும்.
ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
2018ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் பல்வேறு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. ,
எழுத்து தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதி ஆன்லைன் வழி தேர்வு, ஏப்ரல் 15, 16ல் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜேஇஇ, தேர்வில், ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி, குஜராத்தி மொழியிலும் வினாத்தாள்கள் இடம் பெற உள்ளன.
குஜராத், டாமன், டையூ ஆகிய இடங்களில் உள்ள மையங்களில் மட்டும், 2013 முதல், குஜராத்தி மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.ஜேஇஇ, தேர்வின் அடிப்படையில், தரவரிசை தயாரிக்கப்பட்டு, குஜராத் மாநில கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடப்பதால் குஜராத்தி மொழியில் ஜேஇஇ, எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த முறையை எந்த மாநிலம் பின்பற்றினாலும், அந்த மாநில மொழியில், தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.
இந்நிலையில், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதால், தமிழில் வினாத்தாள்கள் இடம் பெறாது என மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குஜராத்தி மாணவர்களுக்கு குஜராத்தியில் வினாத்தாள் வழங்குவதைப் போல் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என 2016 ஆம் ஆண்டு தமிழக கல்வியாளர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கை மத்திய அரசின் செவிக்கு எட்டவில்லை.
எனவே, அவர்கள் மீண்டும் மத்திய அரசை வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...