அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோக்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும் என்று
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்ட்னங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தமிழக ஆரம்பள்ளி
ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுசெயலாளர் தாஸ் நெல்லையில் அளித்த பேட்டி
அளித்தபோது ஒரு பக்கம் 13,000 புதிய ஆசிரியர்களை நியமிக்கிறோம் என
சொல்லிவிட்டு 500 ரோபோக்களை கொண்டு பாடம் நடத்துவோம் என அமைச்சர் சொல்வது
விந்தை.
மேலும், ரோபோக்களை வைத்து பாடம் நடத்தப்படும் என்ற அமைச்சர் அறிவிப்பு
அதிர்ச்சிக்குரியது, என்றும் "அ"என்று கை பிடித்து கற்று கொடுக்கும் தொடு
உணர்வு ஆசிரியர் மூலமே கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊடக நண்பர்கள் வெறும் செய்திகளை மட்டும் போடாதீர். அமைச்சர் சொல்றத மட்டும் போட நீங்க ஒன்னும் அவர்கள் ஊடகம் அல்ல. பொதுவான நடு நிலை தன்மையுடன் செயல் படுங்கள். உலகதரம்வாய்ந்த கல்வி கல்வினு தம்பட்டம் அடிகிறீங்க அனால் மற்ற மாநிலத்தில் உள்ள அளவு கூட தரமான கல்வியை கொடுக்க வில்லை. ஊடக நண்பர்கள் கேள்வியே கேக்க மாட்டிங்களா? இல்ல கேள்வி கேக்க உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? இல்ல உங்களுக்கு கேள்வி கேக்க தெரியாதா? ஒரு வருடமாக சொன்னதையே சொல்லுமாம் கிளி பிள்ளை (செங்கோட்டையன்) அது மாதிரி கூறி வருகிறார். அதையும் வேறு செய்தி கிடைக்காத மாதிரி நீங்களும் தினம் தினம் தயவு செய்து விளம்பரம் செய்ய வெண்டாம். இனியாவது மக்கள் கேக்க நினைக்கும் கேள்விகளை அமைச்சர்களை பார்த்து கேளுங்கள். அடுத்த முறை கல்வி அமைச்சரை சந்திக்கும் ஊடக நண்பர்கள் கணினி பாடத்தை நடமுறை படுத்த சொல்லுங்கள். ஒரு வருடத்திற்கு மேலாக புதிய பாடதிட்டம் பணிகள் நடைபெற்று வருகின்றன அனால் கணினி பாடம் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என cm cell,SCERT க்கே தேரியவில்லை. அரசு கொள்கை முடிவுனு ஒரு அல்ப காரணம் சொல்லுவாங்க பாருங்க...,
ReplyDelete