ஐடி ஊழியர்களுக்குத் தொழில்நுட்ப திறன் பயிற்சிகள் அளிக்கும் வகையில் பியூச்சர் ஸ்கில் என்ற ஆன்லைன் பயிற்சி மையத்தை நாஸ்காம் உருவாக்கியுள்ளது.
அண்மைக்காலமாகத் திறமையின் பெயரால் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பணிநீக்க நடவடிக்கையால் ஐடி ஊழியர்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் ஐடி ஊழியர்களுக்குத் திறன் பயிற்சி வழங்க ஆன்லைன் வலைத்தளம் ஒன்றைத் தகவல் தொழில்நுட்ப தொழில்துறை அமைப்பான நாஸ்காம் வடிவமைத்துள்ளது. பியூச்சர் ஸ்கில் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள வலைப்பக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (பிப்ரவரி 19) டெல்லியிலிருந்து காணொளிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஐடி ஊழியர்களும், ஐடி துறை மாணவர்களும் படித்துக் கற்றுக்கொள்ளும் விதமாக பியூச்சர் ஸ்கில் இணையதளப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்று நாஸ்காம் கூறுகிறது. இதுகுறித்து அதன் தலைவர் ஆர்.சந்திரசேகர் கூறுகையில், "அடுத்த சில வருடங்களில் 40 லட்சம் ஐடி துறை சார்ந்த பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது தான் எங்கள் நோக்கமாகும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...