ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மறியல்
போராட்டம் நடந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்
சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், மறியல் போராட்டம்,
நேற்று நடந்தது. தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த, ஆசிரியர்கள் மற்றும்
அரசுஊழியர்கள், போராட்டத்தில் பங்கேற்றனர்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது; ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, 2016 ஜனவரி முதல், ஊதிய உயர்வை அமல்படுத்தி, 21 மாத நிலுவைத் தொகையை வழங்குவது; இடைநிலை ஆசிரியர்களின், ஊதிய முரண்பாடுகளை களைவது ஆகிய, கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடந்தது. சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் திரண்ட, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை, போலீசார் கைது செய்து, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்திற்கு, அழைத்து வந்தனர். இந்நிலையில், வகுப்புகளை, 'கட்' அடித்து, ஆசிரியர்கள் சிலர் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களது பெயர் பட்டியலை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...