Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை??

            அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்.படித்தோம்.
ஆனால்இன்று நாங்கள் படித்த பி.எட்.படிப்பு எந்தவொரு பயனும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 2011-ல் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இதனை நம்பி பெரும்பாலானோர் பி.எட்.படித்தோம்.

            ஆனால்ஆட்சி மாற்றத்தினால் இந்த மகத்தான திட்டம் கொண்டுவரப்பட்ட வேகத்திலேயே கைவிடப்பட்டது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இவைகள் மாணவர்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. மேலும்பெரும்பாலான கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்றுவரையில் குடோனிலேயே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

            தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காகமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால்இந்த நிதிப்பணமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வியும், 50,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

            அரசு பள்ளிகளில் தான் எந்தவொரு பணி வாய்ப்பும் இல்லையென்றால்தனியார் பள்ளிகளிலும் கூட எங்களுக்கென பணி வாய்ப்புகள் இல்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரிய கணினி ஆசிரியர்களுக்கென உரிய பணிவிதி மற்றும் பணி வரன்முறையை உருவாக்கித் தருமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால்இதுபற்றி அரசு செவி சாய்க்கவில்லை.

            அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் விரைவில் வந்துவிடும்அரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன் காத்திருந்துகாத்திருந்து மிஞ்சியது ஏமாற்றமே. கணினி ஆசிரியர் வேலையை நம்பி பல இளைஞர்கள் திருமண வயதைக் கடந்துவிட்டனர். அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என நம்பியே பல யுவதிகள் முதிர்கன்னிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவலம் கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைத்த சாபம்.

            அண்டை மாநிலங்களான கேரளாகர்நாடகாதெலுங்கானாந்திரா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் இன்று ஒரு முக்கியப் பாடமாக உள்ளது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரளாவில் கணினி அறிவியல்” பாடம் கொண்டுவரப்பட்டது. ஆனால்இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியலுக்கும் மற்ற பாடங்களைப் போல் கட்டாயத் தேர்ச்சி முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

            தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்.படித்து முடித்துவிட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். படித்தது முதல் இன்றுவரையில் இவர்கள் சொல்லவண்ணா துயரங்களை அடைந்துள்ளார்கள். கசாப்புக் கடை முதல் கரும்பு வெட்டும் தொழிலாளி வரை கணினி ஆசிரியர்களின் துயரச் சித்திரம் நீண்டுகொண்டேதான் செல்கிறது. எங்களுக்கான விடியல் என்றுதான் கிடைக்கும்..??

            தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2011-லிருந்து மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2011-லிருந்து 2017-வரை 600 கணினி ஆசிரியர்கள் மட்டுமே அரசு தரப்பிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லைஆனால்இலட்சக்கணக்கான மடிக்கணினிகள் கொடுத்து என்ன பயன்?? தற்போது பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் உள்ளீடு செய்யப்பட்ட விரலியை (Pendirve)  தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

            மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியும்விரலியும் கணினி ஆசிரியர்களின்றி எவ்வாறு முழு பயனை அளிக்கும்..?? கணினி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்..??

            எட்டு வருடங்களுக்கும் மேலாககணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக கணினி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கென எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

கணினி அறிவியலின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களும் செய்யப்பட்டன...
வரும் கல்வியாண்டிலாவது விடியல் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் கணினி ஆசிரியர்கள் காத்துள்ளனர்...
2018 பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...
கல்வி மானியக் கோரிக்கையில் கணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா தமிழக அரசு??   

G. RAJKUMAR, MCA., BEd.,
96983 39298
மாநில இணைய ஆசிரியர்
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல்  
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்




3 Comments:

  1. nice solla thuyarangal kaneerodu

    ReplyDelete
  2. I m completed M. Sc B. Ed CS in 2009. I m waiting the govt post till now. I ve the same feelings what u ve given in the letter. I m expecting same. Let's hope for this.

    ReplyDelete
  3. I m completed M. Sc B. Ed CS in 2009. I m waiting the govt post till now. I ve the same worries what u ve given in the letter. I m expecting same. Let's hope for this.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive