புதுடில்லி,''பள்ளி பாடத்திட்டங்கள், ௨௦௧௯ கல்வியாண்டு முதல், பாதியாக
குறைக்கப் படும்;
மாணவர்களின் மற்ற திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், பாடச்சுமையை குறைக்கும்படி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் வலியுறுத்தப் பட்டுள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
மாணவர்களின் மற்ற திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், பாடச்சுமையை குறைக்கும்படி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் வலியுறுத்தப் பட்டுள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
அடுத்த, கல்வியாண்டு, முதல்,பாடத்திட்டங்கள்,குறைப்பு! என்.சி.இ.ஆர்.டி.,க்கு, மத்திய அரசு, ஆலோசனை
தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான பாடதிட்டங்களை,
என்.சி.இ.ஆர்.டி.,எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
கவுன்சில் தயாரித்து வருகிறது. மாணவர் களுக்கு பாடச்சுமை அதிகமாக உள்ள
தாகவும், இதனால், மாணவர்களால்,வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபட முடியாமல்
போகிறது என்றும், தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர், அளித்த பேட்டியில் கூறியதாவது:
பள்ளி மாணவர் களுக்கு, பாடத்திட்டங்களின் சுமை அதிகமாக உள்ளது உண்மை தான்.
பி.ஏ., - பி.காம் போன்ற பட்டப் படிப்புகளை விட, சி.பி.எஸ்.இ., பள்ளி
மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் அதிகமாக உள்ளன.
, மாணவர்கள், படித்தால் மட்டும் போதாது; பல துறைகளிலும் அவர்களின்
அறிவாற்றலை மேம்படுத்த வேண்டும்; அதற்கு, அவர்களுக்கு முழு சுதந்திரம்
வழங்க வேண்டும்.
அதனால், பள்ளி பாடத்திட்டங்களின் சுமையை பாதியாக குறைக்கும் படி,
என்.சி.இ.ஆர்.டி.,யிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.2019 கல்வியாண்டு முதல்,
இந்த பாடத்திட்டம் அமலுக்கு வரும். பள்ளி கல்வி யில் சீர்திருத்தங்கள்
கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது.
அதே நேரத்தில், தேர்வு நடத்தாமல், போட்டியிருக்க முடியாது; இலக்கும்
இருக்காது.மாணவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கு, தேர்வுகளும்,
போட்டியும் அவசியம். மார்ச்சில் நடக்கும் தேர்வில், ஒரு மாணவர் தேர்ச்சி
பெறாவிட்டால், மே மாதத்தில் மீண்டும் நடத்தப்படும் தேர்வை, அவர் எழுத
வேண்டும்; இதிலும் தேர்ச்சி பெறாவிட்டால் மட்டுமே, அந்த வகுப்பிலேயே, அந்த
மாணவர் நீட்டிக்கப்படுவார்.
இது தொடர்பான மசோதா, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாவது
பாதியில் தாக்கல் செய்ய படும். போதிய பயிற்சியற்ற ஆசிரியர்களால் தான்,
மாணவர்களின் கல்வி தரம் குறைகிறது. மாணவர்களின் திறமை மற்றும் பலவீனத்தை
அறிந்து, அதற்கேற்ப அவர்களை தயார்படுத்த வேண்டியது, ஆசிரியரின் கடமை.
கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2015ம் ஆண்டுக்குள், 20 லட்சம்
ஆசிரியர்களுக்குபயிற்சியளித்திருக்க வேண்டும். ஆனால், ஐந்து லட்சம்
ஆசிரியர்களுக்கு மட்டுமே பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை
தொடர்பான அறிக்கை, அடுத்த மாதம் இறுதியில் சமர்ப்பிக்கப் படும்.இவ்வாறு
அவர் கூறினார்.
அமைச்சர் கூறியது சரியா?:' குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' என்ற,
சார்லஸ் டார்வினின் சித்தாந்தத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை
இணையமைச்சர், சத்ய பால் சிங், தவறு என கூறினார்; இதற்கு, விஞ்ஞானிகளும்,
கல்வி யாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஐ.ஐ.
எஸ்.இ.ஆர்., எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
சார்பில், சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வில், 'டார்வின் சித்தாந்தம்
குறித்து, அமைச்சர் தெரிவித்த கருத்து சரியா?' என, கேள்வி
கேட்கப்பட்டிருந்தது.
இது பற்றி, ஐ.ஐ.எஸ்.இ.ஆரின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவு டீன்,
சஞ்சீவ் கலண்டே கூறியதாவது:புத்தகங்களை படித்து, மாணவர்கள் தேர்வு
எழுதுவதை, ஐ.ஐ.எஸ். இ. ஆர்., எப்போதும் விரும்புவதில்லை. மாணவர் களின்
சிந்தனையை அதிகரிக்க வேண்டும். அதனால் தான், டார்வின் சித்தாந்தம்
குறித்து, அமைச்சர் தெரிவித்த கருத்து பற்றி கேட்கப் பட்டது. மாணவர்கள்
என்ன நினைக்கின்றனர் என்பதை அறியவே, இந்த கேள்வி கேட்கப்பட்டது.இவ்வாறு
அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...