'தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜி., படிப்பில் சேர்வதற்கான,
ஜே.இ.இ., நுழைவு தேர்வை, குஜராத்தியிலும் எழுதலாம்' என, மத்திய அரசு
அறிவித்துள்ளது.
தேசிய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., -
ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்ட நிறுவனங்களில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ.,
நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். தற்போது, பிளஸ் 2 படிக்கும்
மாணவர்கள், ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, வரும் கல்வி
ஆண்டில், இன்ஜினியரிங் படிப்பில் சேர முடியும். இதற்கான, ஜே.இ.இ., எழுத்து
தேர்வு, ஏப்., 8; ஆன்லைன் வழி தேர்வு, ஏப்.,15, 16ல் நடத்தப்படும் என,
மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில், ஜே.இ.இ., தேர்வில், ஹிந்தி,
ஆங்கிலம் மட்டுமின்றி, குஜராத்தி மொழியிலும் வினாத்தாள்கள் இடம் பெற உள்ளன.
குஜராத், டாமன், டையூ ஆகிய இடங்களில் உள்ள மையங்களில் மட்டும், 2013
முதல், குஜராத்தி மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டுள்ளது.ஜே.இ.இ.,
தேர்வின் அடிப்படையில், தரவரிசை தயாரிக்கப்பட்டு, குஜராத் மாநில கல்வி
நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடப்பதால், குஜராத்தியில், ஜே.இ.இ., எழுத
அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை எந்த மாநிலம் பின்பற்றினாலும், அந்த
மாநில மொழியில், தேர்வு எழுத அனுமதிக்கப்படும். 'தேர்வுக்கான அனைத்து
ஏற்பாடுகளும் முடிந்து விட்டதால், தமிழில், வினாத்தாள்கள் இடம் பெறாது;
தமிழில், ஜே.இ.இ., தேர்வை எழுதும் வாய்ப்பை வழங்குவது சாத்தியமில்லை' என,
மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...