பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் -மாணவர்களுக்கு இடையிலான உறவில் விரிசல்
அதிகரித்து வரும் போக்கைச் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்
என்று தனலட்சுமி பொறியியல் கல்லூரி தலைவர் பேராசிரியர் ராமூர்த்தி
கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
வழங்கும் விழா, தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் தனலட்சுமி பொறியியல்
கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவில் அவர் பேசியதாவது:
ஆசிரியர்கள் சொந்த விருப்பு வெறுப்பின்றி அவர்களது கடமைகளை உணர்ந்து
செயல்படும்போது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மட்டுமல்லாமல்,
அனைவராலும் சிறந்த ஆசிரியர் என்று பாராட்டும், நன்மதிப்பு, மரியாதையையும்
பெற முடியும். மாணவர்களின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், நன்நடத்தை,
ஒழுக்கம் ஆகியவற்றையும் மேம்படுத்த உறுதுணையாக இருந்துவரும் ஆசிரியர்கள்
பாராட்டுக்குரியவர்கள் என்றார் ராமமூர்த்தி.
விழாவில், சேலையூர் சீயோன் மெட்ரிக் பள்ளி தாளாளர் என்.விஜயன்,
குரோம்பேட்டை எஸ்.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி முதல்வர் எஸ்.பேபி சரோஜா,
செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதல்வர் எம்.அஞ்சனாதேவி, மார்க் மெட்ரிக்
பள்ளி முதல்வர் பிரின்ஸ் பாபு ராஜேந்திரன், ஏகனாம்பேட்டை அரசு பள்ளி தலைமை
ஆசிரியை என்.சுதா உள்ளிட்ட 30 பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர்
விருதுகள் வழங்கப்பட்டன.
கல்லூரி தாளாளர் வி.ஆர்.தனலட்சுமி, இயக்குநர் ஏ.ராஜலட்சுமி, முதல்வர்
கே.எல்.சண்முகநாதன், டீன் ஆர்.கே.நடராஜன், பேராசிரியர் கே.செந்தமிழ்செல்வன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...