திருநெல்வேலி,நெல்லை
மாவட்டம், பாலாமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சூரிய ஒளி
மின்சாரம் மூலம் செயல்படும், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில், பல்வேறு அரசு தொடக்க, நடுநிலை பள்ளி களில், கம்ப்யூட்டர் வசதியுடன், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 முதல் 5ம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு செய்முறை விளக்கத்துடன் சமச்சீர் கல்வி பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது.இந்நிலையில், மானுார் ஒன்றியம், பாலாமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், செல்கோ இந்தியா நிறுவனத்தின் சார்பில், சூரியஒளி மின்சாரம் மூலம், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கப்பட்டது. வகுப்பறையில், கரும்பலகை மீது,40 அங்குல, 'எல்.சி.டி., டிவி' பொருத்தப்பட்டு உள்ளது.நெல்லை கலெக்டர், சந்தீப் நந்துாரி, ஸ்மார்ட் வகுப்பறையை துவக்கி வைத்தார். கம்ப்யூட்டர் மூலம், மாணவர்களுக்கு எளிதில் புரியும் விதமாக, எல்.சி.டி., திரையில் பாடம் நடத்தப்படவுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...