தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையனுக்கு ஈரோடு மாவட்ட தனியார்
பள்ளிகள் சார்பில் பாராட்டு விழா கோபியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழக
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட
பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் ேபசியதாவது:
பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு பல ஆண்டாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை.அதனால்தான் மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டமாகஇருந்தாலும், தேர்வாக இருந்தாலும் தமிழக மாணவர்களால் முறியடிக்க முடியவில்லை. எனவேதான் புதிய கல்வி திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனி கொண்டுவரப்படும்பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு இணையாக இருக்கும். அதே நேரத்தில் மெட்ரிக் பாடத்திட்டமும் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக 72 பாடங்கள் கொண்டுவரப்பட உள்ளது.புதிய பாடதிட்டத்திற்கு பிறகு நீட் மட்டுமல்ல மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு தேர்வையும் தமிழகமாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களின் திறனைஉருவாக்கி வருகிறோம்.
தற்போது 412 மையங்களில் 71 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு மார்ச் மாதத்திற்குள் லேப்டாப் வழங்கப்படும்.முதல் கட்டமாக 500 பள்ளிகளில் ரோபோடிக்ஸ் பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.அதே போன்று மாணவர்களுக்கான காப்பீடு திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும்.தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட தமிழகத்தில் முதல் முறையாக 14417 என்ற எண்ணில் புதிய ஹெல்ப் லைன் தொடங்கப்பட உள்ளது.24 மணி நேரமும் 10 பணியாளர்கள் பணியில் இருப்பார்கள். இந்த ஹெல்ப் லைன் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.தனியார் பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தடையின்மை சான்று பெற வேண்டும் என்ற நிலையை 5 ஆண்டுக்கு ஒரு முறை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி கட்டிடங்களுக்கு அந்தந்த பகுதி ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடமே அனுமதி பெறுவது குறித்து முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...