திருச்சியில் பொது கட்டண கழிப்பறை அருகில் ஏடிஎம் வசதியையும் திருச்சி மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
திருச்சியில் உள்ள 17 பொது கட்டண கழிப்பறையில் ஏடிஎம் வசதியை ஏற்படுத்தவும், விளம்பரப் பலகைகள் வைக்கவும் இடவசதி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள கட்டண கழிப்பறைகளைச் சிறந்த முறையில் பராமரிக்க தேவையான நிதியை ஈட்டும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஏடிஎம் வசதியை ஏற்படுத்தி அதற்கான வாடகையைப் பெற்று கழிப்பறைகளைச் சுத்தமாகப் பராமரிக்கச் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஏடிஎம்மைத் திறந்து வைத்த திருச்சி மாநகர ஆணையர் என்.ரவிசந்திரன், திருச்சியில் முக்கியமான பகுதிகளில் அமைந்துள்ள கழிப்பறைகளை சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ளார்.
திருச்சியில் 400 கழிப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், 17 கழிப்பறைகளில் ஏடிஎம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு, அவற்றை எஸ்பிஐ வங்கிக்குக் குத்தகை விடப்பட்டுள்ளது. இந்த 17 ஏடிஎம்கள் மூலம் மாநகராட்சிக்கு மாதந்தோறும் ரூ.1.28 லட்சம் வருமானம் கிடைக்கும். இது ஆண்டுக்கு ரூ.15.35 லட்சம் வருமானமாகும். கழிப்பறைக்கு அருகில் விளம்பரப் பலகைகள் வைப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.7.46 வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...