சில தினங்களாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும், பல இடங்களில், ஏர்செல் சேவை செயலிழந்துள்ளது.
இது தொடர்பாக, அந்நிறுவனத்தின், தென் மாநில தலைவர்,
சங்கரநாராயணன் கூறியதாவது: நாங்கள், குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்தின்,
தொலைத்தொடர்பு கோபுரங்களை, பயன்படுத்துகிறோம். இரு தரப்புக்கு இடையே, நிதி
தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர்கள் திடீரென கோபுரங்களை
மூடிவிட்டதால், சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வேறு நிறுவனத்திற்கு
மாறும் வசதியை, பீதி காரணமாக, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், ஒரே
நேரத்தில் பெற முயற்சித்ததால், அந்த, 'சர்வர்' செயலிழந்துவிட்டது.இவ்வாறு
அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...