நேற்று 06.02.2018 வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைப்பெற்ற அவசர கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் தீர்மானங்களாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாணவனால் தாக்கப்பட்டத்தற்கு இக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2.மருத்துவர்களுக்கு உள்ளதைப் போல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு வழங்கி உரிய அரசாணை வெளியிட தீர்மானிக்கப்பட்டது.
3.தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவர்களை தொடர்ந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும் போக்கை முற்றிலும் கைவிட வேண்டும்.
4.வரும் வியாழக்கிழமை 08.02.2018 அன்று இதனை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
5. இத்தீர்மானங்களை வலியுறுத்தி அன்று மாலை மாவட்ட ஆட்சியர்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் வழியாக அரசுக்கு முறையிடுதல்.
வேலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கூட்டமைப்பிற்காக .
Thanks to Mr. G.D. Babu, மாவட்ட செயலாளர், TAMS, Vellore.
Super it will spread over tamilnadu also
ReplyDeleteGood move
ReplyDeleteVery good
ReplyDelete