Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மார்ச் 7-ம் தேதி தொடங்குகிறது: பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - அக மதிப்பெண் ஆன்லைனில் பதிவேற்றப்படும்

பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டுமுதல் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனால், மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், பாடவாரியான மாதிரி வினாத்தாள்கள் முன்கூட்டியே அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டன.

அரையாண்டுத் தேர்வை தொடர்ந்து, முதலாவது திருப்புதல் தேர்வு முடிவடைந்த நிலையில், அடுத்த சில நாட்களில் 2-வது திருப்புதல் தேர்வுகள் தொடங்குகின்றன.ஒவ்வொரு பாடத்துக்கான மதிப்பெண் 200-ல் இருந்து 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் ‘தியரி’ எனப்படும் கருத்தியல் தேர்வுக்கு 70 மதிப்பெண். செய்முறைத் தேர்வுக்கு 30 மதிப்பெண். இந்த 30-ல் 20 புற மதிப்பெண் ஆகும். எஞ்சிய 10 அக மதிப்பெண். இந்த அக மதிப்பெண்ணில் செயல்திட்டம் (புராஜெக்ட்), வருகைப்பதிவு, களஆய்வு என பாடங்களுக்கு தக்க வாறு ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைகிறது.

அக மதிப்பெண்ணை மார்ச் 13 முதல் 23-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும், மதிப்பெண் பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் மார்ச் 26-ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive