தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்
தேர்வுகள், மார்ச் மாதம் துவங்க உள்ளன. இந்த தேர்வுகளில், 28 லட்சம் பேர்
பங்கேற்கின்றனர். 3,500 பள்ளிகளில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
தமிழக பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டத்தில், 10ம்
வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த
ஆண்டு முதல், பிளஸ் 1க்கும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ல் பொது தேர்வு துவங்க
உள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒன்பது லட்சம் பேர்
பங்கேற்கின்றனர். அவர்களில், 8.69 லட்சம் பேர், பள்ளிகளில் படிக்கும் மாணவ
-- மாணவியர்.
தமிழகத்தில் இருந்து, 6,754 பள்ளிகளைச் சேர்ந்த, 8.52 லட்சம் மாணவ -
மாணவியரும், புதுச்சேரியில், 147 பள்ளிகளைச் சேர்ந்த, 15,140 மாணவர்களும்,
பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.இத்தேர்வு எழுதுவோரில், 4.03 லட்சம் பேர்
மாணவர்கள்; 4.64 லட்சம் பேர் மாணவியர். 5.48 லட்சம் பேர், அறிவியல்
பாடப்பிரிவுகளில் தேர்வு எழுத உள்ளனர். வரலாறு பிரிவில், 14 ஆயிரம்;
வணிகவியல், கணக்கு பதிவியல் பிரிவில், 2.42 லட்சம் பேரும் தேர்வு
எழுதுகின்றனர். தொழிற்கல்வி பிரிவில் படிக்கும், 62 ஆயிரத்து, 751 பேரும்,
பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவை தொடர்ந்து,
இந்தாண்டு, 279 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.பிளஸ் 1
மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது;
மார்ச், 7ல் தேர்வுகள் துவங்குகின்றன. பிளஸ் 2 வகுப்புகள் அறிமுகமாகி, 40
ஆண்டு களில், பிளஸ் 1 மாணவர்கள், முதன் முறையாக பொதுத் தேர்வு எழுத
உள்ளனர். இந்த ஆண்டு, 8.62 லட்சம் பேர், பிளஸ் 1 தேர்வு எழுத உள்ளனர்.
இவர்களில், 4.60 லட்சம் மாணவியர் அடங்குவர்.இத்தேர்வுகளுக்காக, தமிழகம்
மற்றும் புதுச்சேரியில், 2,790 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச்,
16ல் துவங்கும் 10ம் வகுப்பு தேர்வில், 10.70 லட்சம் பேர்
பங்கேற்கின்றனர். அவர்களில், 5.10 லட்சம் பேர் மாணவியர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...