Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்திய ரயில்வேயில் 26 ஆயிரத்து 505 ரயில்வே பணியாளர் தேர்வு !

இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் 2018-ஆம் ஆண்டிற்கான 26 ஆயிரத்து 505 உதவி லோகோ பைலட், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் மார்ச் 5-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2018-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்களை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி லோகோ பைலட், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. இதில் சென்னைக்கு 945 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற வாழ்த்துக்கள்.

CENTRALISED EMPLOYMENT NOTICE (CEN) No.01/2018

மொத்த காலியிடங்கள்: 26,502

பணி: உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot)
காலியிடங்கள்: 17673

பணி: டெக்னீசியன் (Technicians)
காலியிடங்கள்: 8829

மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. RRB Ahmedabad - 164
2. RRB Ajmer - 1221
3. RRB Allahabad - 4694
4.. RRB Bangalore - 1054
5. RRB Bhopal - 1679
6. RRB Bhubaneswar - 702
7. RRB Bilaspur - 945
8. RRB Chandigarh - 1546
9. RRB Chennai - 945
10. RRB Gorakhpur - 1588
11. RRB Guwahati - 367
12. RRB Kolkata - 1824
13. RRB malda - 880
14. RRB Mumbai - 1425
15. RRB Muzaffarpur - 465
16. RRB Patna - 454
17. RRB Ranchi - 2043
18. RRB Secunderabad - 3262
19. RRB Siliguri - 477
20. RRB Thiruvananthapuram - 345

சம்பளம்: மாதம் ரூ.19,990 + இதர சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: மெட்ரிக்/பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்தவர்கள், 3 டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதாவது: Armature and Coil Winder, Electrician, Electronics Mechanic, Fitter, Heat Engine, Instrument Mechanic, Machinist, Mechanic Diesel, Mechanic Motor Vehicle, Millwright Maintenance Mechanic, Mechanic Radio & TV, Refrigeration and Air-conditioning Mechanic, Tractor Mechanic, Turner, Wireman அல்லது மெட்ரிக், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட துறைகளில் தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரண்டீஸ்) முடித்தவர்கள் அல்லது 3 years Diploma in Mechanical, Electrical, Electronics, Automobile Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்டமாக நடத்தப்படும் கணினி வழியிலான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.250. இதனை நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தியும் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: சென்னை மண்டலத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மண்டலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்குரிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive