''அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 ஆசிரியர்
பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள்
வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால்
தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி: பொறியியல், பாலிடெக்னிக்கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்களை சமீபத்தில் நிரப்பியுள்ளோம். அரசு கலைக் கல்லுாரிகளை பொறுத்தவரை, பேராசிரியர்கள் சிலர், கோர்ட்டை அணுகியுள்ளதால், பணிகள் தேங்கியுள்ளன; சிக்கல் தீர்க்கப்பட்டு, முதல்வர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கடந்த இரு ஆண்டுகளில், 370 பேராசிரியர்கள் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளனர்; 1,966 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இவ்விரண்டையும் சேர்த்து, 2,336 இடங்களுக்கான தகவலை, டி.ஆர்.பி., வசம் ஒப்படைக்க உள்ளோம். இதற்கான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பல்கலை, கல்லுாரி பேராசிரியர்களின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதியம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...