புதுச்சேரி, லாஸ்பேட் பகுதியை சேர்ந்த, வழக்கறிஞர், பரிமளம் தாக்கல் செய்த மனு:
கல்வி கொள்கையில், அரசு ஏற்படுத்திய மாற்றத்தால், பள்ளி மாணவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. அரசு பிறப்பித்த உத்தரவின்படி, பிளஸ்1, பிளஸ் 2 க்கு, பொது தேர்வு நடத்த வேண்டும்; பிளஸ் 2 மதிப்பெண்ணுடன், பிளஸ் 1 மதிப்பெண்ணையும் சேர்த்து, கணக்கிட வேண்டும்.
தேர்வு முறை, மதிப்பெண் முறை, &'வெயிட்டேஜ்&' மதிப்பெண், மொத்த மதிப்பெண் என, மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உரிய முறையில் பரிசீலிக்காமல், இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.அரசின் உத்தரவானது, கல்வி முறையில் பேரழிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. முறையாக பரிசீலிக்காமல் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்.
நடைமுறைப்படுத்த முடியாத திட்டத்தை அமல்படுத்துவதை விட, பிளஸ் ௧ பாடங்களை புறக்கணிக்கும் பள்ளிகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன், தற்போதைய உள்கட்டமைப்பு போதுமானதாக இருக்கிறதா; போதிய ஆசிரியர்கள், ஊழியர்கள் இருக்கின்றனரா என்பதையும், பார்க்க வேண்டும்.புதிய திட்டத்தால், மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். அதனால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுவர்.
மாநில பாடத்திட்டம், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்துக்கு இணையாக இல்லை. இரண்டையும் சமமாக கருதுவது சரியல்ல. சி.பி.எஸ்.இ., முறையில், பிளஸ் 1மதிப்பெண்ணை கணக்கில் எடுப்பது இல்லை. ஆனால், மாநில பாடத் திட்டத்தில், பிளஸ் 1 மதிப்பெண்ணையும் சேர்த்து கணக்கிடப்படுகிறது. இந்த இரு பிரிவில் படிப்பவர்களுக்கும் இடையே, பாரபட்சம் காட்டப்படுகிறது.
எனவே, புதிய தேர்வு முறை குறித்து, தமிழக அரசு, ௨௦௧௭ மே மாதம் பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். பிளஸ் 2தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிடும் போது, பிளஸ் ௧ மதிப்பெண்ணை சேர்க்கக் கூடாது என, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, &'முதல் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், வி.ராகவாச்சாரி ஆஜரானார்.பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், &'தமிழக அரசின், பள்ளி கல்வித் துறை முதன்மை செயலரிடம், மனு அளிக்கலாம். மனுவை பரிசீலித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் துறைகளில் உள்ள நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, அரசு முடிவெடுக்க வேண்டும்&' என, கூறியுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...