இந்தியா தனது வேலைவாய்ப்பின்மை விகிதத்தைக் குறைக்க வேண்டுமானால் 2030ஆம் ஆண்டு வரையில், ஆண்டுக்கு சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் இந்த வேலைவாய்ப்பு அளவு மிகவும் குறைவான ஒன்றாகும். இந்நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு 8,30,000 வேலைவாய்ப்புகள் வீதம் அடுத்த 12 ஆண்டுகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டால் மட்டுமே வேலையின்மை பிரச்னை இந்தியாவுக்கு இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘இந்தியாவின் வேலைச் சந்தையில் சுமார் 2.9 கோடிப் பேர் சரியான வகையில் பயன்படுத்தப்படவில்லை. மேலும், 40 லட்சம் பெண்கள் போதிய வேலையின்மையால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 30 லட்சம் பேர் நிலையான வருமானம் வரும் வேலைக்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் சுமார் 3.6 கோடிப் பேர் முறையான வேலைவாய்ப்பு பெறாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 4 சதவிகிதத்தினர் இத்தகைய வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.’
எனவே இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் 2030ஆம் ஆண்டுக்குள் இதுபோன்ற வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு இந்தியா தீர்வு காண வேண்டும் என்று மோதிலால் ஓஸ்வால் ஆய்வறிக்கை கூறுகிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...