வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட, 19 ஆயிரம் பேருக்கு, ஒரு நாள் சம்பளத்தை
பிடிக்க, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது.ஊதிய உயர்வை விரைவாக இறுதி
செய்யக்கோரி, மின் வாரியத்தில் உள்ள, மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட,
சில சங்கங்கள், பிப்., 16ல், வேலை நிறுத்தம் செய்தன.
இதையொட்டி,
'ஒரு நாள் பணிக்கு வராவிட்டாலும், அவர்களின் எட்டு நாள் சம்பளம் பிடித்தம்
செய்யப்படும்' என, மின் வாரியம் எச்சரித்திருந்தது.அதை பொருட்படுத்தாமல்,
திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் அறிவித்த தினத்தன்று, 19 ஆயிரம் பேர் விடுப்பு
எடுத்து, பணிக்கு வரவில்லை.
இதனால், மின் கட்டணம் வசூல், மின் வினியோக பணிகள் பாதிக்கப்பட்டன.இது
குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:வேலை நிறுத்தத்தில்
ஈடுபடுவோருக்கு, எட்டு நாள் சம்பளம் பிடிக்கப்படும் என,
தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், போராட்டத்தில் பங்கேற்ற வர்களுக்கு, சம்பளம் பிடிப்பது
குறித்து, இறுதி முடிவு எடுக்கவில்லை. அதே சமயம், 'வேலை செய்யவில்லை; சம்பள
மும் இல்லை' என்பதற்கு ஏற்ப, போராட்டம் நடந்த நாளில், பணிக்கு
வராதவர்களுக்கு, ஒரு நாள் சம்பளம் உறுதியாக பிடிக்கப்படும்.இவ்வாறு அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...