ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர், பன்ஸ்வாரா பகுதியில்,
பூமிக்கடியில் சுமார் 11.48 கோடி டன் தங்கம் இருப்பதை இந்தியப் புவியியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து இந்தியப் புவியியல் மையத்தின் இயக்குநர் குட்டும்பா ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பன்ஸ்வாரா, உதய்பூர் பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதை உறுதிசெய்துள்ளோம். சுமார் 300 அடி ஆழத்தில் தங்கம் இருப்பதாகத் தெரிகிறது. அப்பகுதிகளில் புதைந்து கிடக்கும் தங்கத்தின் அளவு 11.48 கோடி டன் எடை இருக்கும். தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ராஜஸ்தானின் மற்ற பகுதிகளிலும் சுரங்கப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.
தங்கம் மட்டுமன்றி செம்பும் இருப்பதற்கான சுவடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. சிக்கர் மாவட்டத்தில் உள்ள நீம்கா தானா பகுதியிலும் சுரங்கப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஜெய்ப்பூரில் ஈயம், துத்தநாகம் ஆகிய கனிமங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ராஜஸ்தானில் இதுவரை, 80 மில்லியன் டன் செம்பு இருப்பதையும் உறுதிசெய்துள்ளோம்' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...