பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது
தேர்வில் கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தேர்வு ேநரமும்
குறையும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக பள்ளி
கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட
மாவட்டங்களில் 312 இடங்களில் வைபை வசதி அறிமுகம்
செய்யப்படஉள்ளது.இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல்முறையாக அரசு பள்ளிகளில்
வைபை வசதி கிடைக்கும். மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் அடுத்த
மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்தின் மூலம்
விபத்திற்கு ரூ.1 லட்சம், பெரிய காயங்களுக்கு ரூ.50 ஆயிரம் என 48 மணி
நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்வழி ஏற்படுத்தும்
விதமாக 16 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு புத்தக வடிவில் கவுன்சலிங்
மேற்கொள்ள உள்ளோம்.தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் தற்கொலை
எண்ணத்தை மாற்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்.
10 வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்விற்கு கேள்விகள்
குறைக்கப்பட்டு, தேர்வு நேரமும் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் எவ்வித பயமுமின்றி தேர்வை சந்திக்கலாம். இவ்வாறு செங்கோட்டையன்
கூறினார்.
Dear admin....plus one r plus two
ReplyDelete