Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வில் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.
பிளஸ்-2 தேர்வு அடுத்த மாதம் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர் மாணவிகள்.


மேலும் தனித்தேர்வர்கள் 40 ஆயிரத்து 682 பேர் எழுதுகின்றனர். இவர்களில் திருநங்கை 2 பேர். பிளஸ்-2 தேர்வை சுயநிதி பள்ளிகளில் இருந்து 2 லட்சத்து 12 ஆயிரத்து 439 பேர் எழுத உள்ளனர்.

இந்த ஆண்டு முதன் முறையாக பிளஸ்-1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வு அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ந் தேதி முடிவடைகிறது. தேர்வை 8 லட்சத்து 61 ஆயிரத்து 913 பேர் எழுதுகிறார்கள். 1,759 பேர் தனித்தேர்வர்கள்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9 லட்சத்து 64 ஆயிரத்து 441 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 80 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 81 ஆயிரத்து 361 பேர் மாணவிகள்.

தேர்வு குறித்து தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி கூறியதாவது:-

தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் அடுத்து வரும் 6 தேர்வுகளை எழுத முடியாது. ஆள் மாறாட்டம் செய்தால் போலீசில் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள்.

தேர்வுக்கூடத்துக்கு ஷூ, சாக்ஸ், காலணி, பெல்ட் அணிந்து வரக்கூடாது. செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் கொண்டுவரக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive