இந்திய தொலைத்தொடர்பு சேவையில் கூடுதல் பாதுகாப்புகளைக் கொண்டு வரும் நோக்கில் தொலைத்தொடர்பு
அமைச்சகம் அனைத்து டெலிகாம் சேவை நிறுவனங்களையும் தற்போது பயன்பாட்டில் உள்ள 10 இலக்க எண்கள் கொண்ட மொபைல் நம்பரை 13 இலக்க எண்களாக மாற்ற உத்தரவிட்டுள்ளது. இப்புதிய மாற்றங்கள் வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனவரி 8 தொலைத்தொடர்பு அமைச்சகம் ஜனவரி 8ஆம் தேதி நடந்த கூட்டத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள 10 எண் கொண்ட மொபைல் நம்பரை 13 எண்களாக மாற்ற வேண்டும் என்பதற்கான முடிவுகளை எடுத்துள்ளதாகவும், அதன் படி அடுத்தக் கட்ட நடவடிக்கையில் தற்போது அரசு டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளதாக அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜூலை 1 முதல் மொபைல் நம்பரை 13 இலக்க எண்களாக மாற்றும் பணிகள் ஜூலை 1, 2018 முதல் துவங்கும் என்றும், இனி வரும் புதிய எண்கள் அனைத்தும் 13 இலக்க எண்களாகவே வெளியாகும். இந்தப் பணிகள் ஜூலை 1ஆம் தேதி துவங்கவில்லையெனில் அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 31ஆம் தேதிக்குள்ள முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனப் பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இணைப்பு தற்போது இருக்கும் 10 இலக்க எண்களுடன் புதிதாகக் கொண்டு வரப்பட உள்ள 13 இலக்க எண்களுடன் இணைக்கப்படுவதால் கால் இணைப்பில் எவ்விதமான பிரச்சனையும் இருக்காது. முக்கிய நிறுவனங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருக்கும் மொபைல் நம்பர்களை 13 இலக்க எண்களாக மாற்ற நோக்கியா மற்றும் ZTE டெலிகாம் நிறுவனங்களிடம் உதவியை நாடியுள்ளது பிஎஸ்என்எல். இந்தியா டாப்பு தற்போது உலகளவில் சீனாவில் 11 இலக்க எண்களை மொபைல் நம்பராகப் பயன்படுத்தும் நிலையில் புதிதாகக் கொண்டு வரப்போகிற மாற்றங்கள் உலகிலேயே அதிக இலக்க எண்களை வைத்துள்ள நாடுகளில் இந்தியா இடம்பெறும். சீனாவைத் தாண்டி பிரான்சில் Gaudeloupe, Martinique மற்றும் Reunion ஆகிய பகுதிகளில் 13 இலக்க கொண்ட மொபைல் எண்களைப் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பு இந்த மாற்றத்தின் மூலம் இந்திய டெலிகாம் சந்தையில் அதிகப்படியான பாதுகாப்பு உருவாக்க முடியும் எனக் கூறப்படுகிறது. தற்போது மொபைல் எண்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதின் மூலம் கூடுதல் பாதுகாப்பும் கிடைக்கும். Revision Exam 2025
Latest Updates
Home »
» ஜூலை1 முதல் மொபைல் நம்பர் 10 எண்களில் இருந்து 13 எண்களாக மாற்றம்..!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...