மேஷம்
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்
ஏற்படும்.
பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள்
வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில்
விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
ரிஷபம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப
உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சொந்த-பந்தங்கள் தேடி
வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி
மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
மிதுனம்
சோம்பல் நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகள்
கேட்டதை வாங்கித் தருவீர்கள். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் புது
அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கடகம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு
பார்க்க வேண்டி வரும். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க
வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில்
அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
சிம்மம்
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்,
நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய பிரச்னைக்கு சுமூக
தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
கன்னி
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால்
ஆதாயமும் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். புது
ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சில
நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
துலாம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப்
பொழிவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும்.
வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில்
உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம்
கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் தலைமையின்
நம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
தனுசு
சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க
முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். சில
விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை
வெளியிட வேண்டாம்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
மகரம்
பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணம்
வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனப்
பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.
உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
கும்பம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள்
ஆதாயமடைவார்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். மனதிற்கு இதமான செய்தி
வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின்
புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
மீனம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை
கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பு
வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...