மேஷம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள்.
அசுவனி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். யாரும் உங்களை
புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உடல் நலம் பாதிக்கும்.
வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறதியால்
பிரச்னை வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
ரிஷபம்
திட்டமிட்ட வேலைகளை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள்
எதிர்த்துப் பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது
நல்லது. அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் கணிசமாக லாபம்
உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
மிதுனம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில்
வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை
கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
கடகம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால்
மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். செலவுகளை
குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி
உங்களை முழுமையாக நம்புவார்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
சிம்மம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். கேட்ட
இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
கன்னி
சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க
வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள்.
அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள்
தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
துலாம்
மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில்
ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண
முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
விருச்சிகம்
எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அரசால்
அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின்
உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
தனுசு
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று
முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.
பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில்
கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
மகரம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப்
போகும். திடீர் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். தடைப்பட்ட
வேலைகள் முடியும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை
சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
கும்பம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள்
உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு
கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான
வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
மீனம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத்
தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. அரைக்குறையாக நின்ற வேலைகள்
முடியும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...