மேஷம்
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய
செலவுகள் இருக்கும்.
யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். சாலைகளை
கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
ரிஷபம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்
உதவுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.
பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில்
மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
மிதுனம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.
வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில்
உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கடகம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த
சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில்
அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
சிம்மம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி
வரும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அநாவசிய பேச்சை
தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட
வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிடாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல்
கவனம் செலுத்துவது நல்லது.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
கன்னி
பிள்ளைகளின் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். விலை உயர்ந்த ஆடை,
ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வாகனத்தை சரி
செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகள்
வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
துலாம்
கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூரிலிருந்து
மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.
உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
விருச்சிகம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர்களின் அன்புத் தொல்லை
குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம்
உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
தனுசு
எதிர்ப்புகள் அடங்கும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம்
வந்து நீங்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.
உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
மகரம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய
தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது
லாபகரமாக அமையும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.
உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
கும்பம்
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை
திருப்பித் தருவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். தள்ளிப் போன
விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
மீனம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று
நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். ரேவதி
நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே
குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...