மேஷம்
எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய்
முடியும்.
பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி
செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
ரிஷபம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுக்
கிட்டும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சுப
நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி
வெற்றி அடையும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
மிதுனம்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள்
தேடி வந்துப் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த
அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
கடகம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம்
வரும். நட்பு வட்டம் விரியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள்
கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
சிம்மம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள்.
குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். சிறுசிறு அவமானம்
ஏற்படக்கூடும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக்
கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில்
உங்களைப் பற்றி வதந்திகள் வரும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
கன்னி
உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்த சகோதர
வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்-.
வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த
சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
துலாம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால்
அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு
கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில்
உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
விருச்சிகம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென
துடிப்பார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக
ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.
உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
தனுசு
பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது வேலைக் கிடைக்கும்.
வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால்
நிம்மதி கிட்டும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
மகரம்
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்
பாசமழைப் பொழிவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை
தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
கும்பம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள்
பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆடை, ஆபரணம்
சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள்
உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
மீனம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக்
கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப்
போகும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.
விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம்
வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...