மேஷம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை
பல முறை அலைந்து முடிப்பீர்கள்.
பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.
உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில்
கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
ரிஷபம்
பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணம்
வாங்குவீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். மனைவிவழி
உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்
கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
மிதுனம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர்களின்
வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின்
உதவியை நாடுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை
தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள்
தேடி வரும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
கடகம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,
உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத்
தொடங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக்
கூடும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
சிம்மம்
நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி
உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்
இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
கன்னி
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் செல்வாக்குக்
கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிட்டும்.
வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில்
உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
துலாம்
மனஉளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் நலம்
சீராகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய
முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று
நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள்,
உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். சந்தேகப் புத்தியால்
நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு
சுமாராக இருக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
தனுசு
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
பணப்பற்றாக்குறை ஏற்படும். அசதி, சோர்வு வந்து நீங்கும். உறவினர்களுடன்
மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில்
பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால்
சோர்வு வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
மகரம்
புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். உடன்பிறந்தவர்கள் உங்கள்
வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல்
செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில்
புதிய முயற்சிகள் பலிதமாகும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
கும்பம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம்
உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில
சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள்
வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
மீனம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மற்றவர்களுக்காக சில
பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வீடு,
வாகனத்தை சீர் செய்வீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில்
வேலையாட்கள் பொறுப்பாக செயல்படுவார்கள். புது வேலைக்கு முயற்சி
செய்வீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...