பொங்கலுக்கு
பின், பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தா விட்டால், பள்ளிக்கல்வி இயக்குனர்
அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக, அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் சங்க
மாநில தலைவர், ராஜ்குமார் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நேற்று அவர் கூறியதாவது:
பணி மாறுதல் மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை, 2017, அக்., 31ல் வெளியிடப்பட்டது. இன்று வரை நடக்கவில்லை.
உடனடியாக கலந்தாய்வு நடத்த கோரி, வரும் நாட்களில், ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்வோம். இன்னும் நான்கு நாட்களில், நடவடிக்கை எடுக்கா விட்டால், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
பொங்கல் விடுமுறைக்கு பின், அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்களை திரட்டி, பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.
வள மைய ஆசிரியர்களுக்கு, 2013க்கு பின், பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை.
இதனால், 3,000 ஆசிரியர்கள், குடும்பத்தை பிரிந்து சிரமப்படுகிறோம். உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டும், அதிகாரிகள், உத்தரவை அமல்படுத்த தயங்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...