கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோடைகால சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை எழும்பூர்-காரைக்கால் ரெயில்
(வ.எண்.06087), எழும்பூரில் இருந்து ஏப்ரல் மாதம் 2-ந்தேதி முதல் ஜூன்
மாதம் 25-ந்தேதி வரை ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் இரவு 11.45 மணிக்கு
புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு காரைக்கால் சென்றடையும்.
* மறுமார்க்கத்தில் (06088), காரைக்காலில்
இருந்து ஏப்ரல் 3-ந்தேதி முதல் ஜூன் 26-ந்தேதி வரை ஒவ்வொரு
செவ்வாய்க்கிழமைகளிலும் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை
8.25 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
திருச்சி-சென்னை
* திருச்சி-சென்னை எழும்பூர் ரெயில் (06026)
திருச்சியில் இருந்து ஏப்ரல் 7-ந்தேதியில் இருந்து ஜூன் 30-ந்தேதி வரை
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு
9.10 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
* மறுமார்க்கத்தில் (06025) எழும்பூரில்
இருந்து ஏப்ரல் 11-ந்தேதி முதல் ஜூலை 4-ந்தேதி வரை ஒவ்வொரு
புதன்கிழமைகளிலும் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.15 மணிக்கு
திருச்சி செல்லும்.
எர்ணாகுளம்
* சென்னை எழும்பூர்-எர்ணாகுளம்
ரெயில்(06033) எழும்பூரில் இருந்து ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி
வரை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள்
பிற்பகல் 1.30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
* மறுமார்க்கத்தில் (06034) எர்ணாகுளத்தில்
இருந்து ஏப்ரல் 10, 17, 24, மே 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 மற்றும்
ஜூலை 3-ந்தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு
எழும்பூர் வந்து சேரும்.
திருவனந்தபுரம்
*திருவனந்தபுரம் -காரைக்கால் ரெயில்(06046)
திருவனந்தபுரத்தில் இருந்து ஏப்ரல் 4-ந்தேதி முதல் ஜூன் 27-ந்தேதி வரை
ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள்
அதிகாலை 3.45 மணிக்கு காரைக்கால் சென்றடையும்.
* மறுமார்க்கத்தில் (06045) காரைக்காலில்
இருந்து ஏப்ரல் 5-ந்தேதி முதல் ஜூன் 28-ந்தேதி வரை இரவு 10.45 மணிக்கு
புறப்பட்டு, மறுநாள் பகல் 12.15 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும்.
இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...