சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு மானிய தொகையை வங்கிக் கணக்கில்
செலுத்தும் திட்டத்தை 2015ம் ஆண்டு முதல் படிப்படியாக மத்திய அரசு
அமல்படுத்தி வருகிறது. இணைப்பு பெற்றுள்ள அனைவரும் தங்கள் ஆதார் எண்ணை
இணைக்க வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் வலியுறுத்தின.
அதிலும்
டிச.31ம் தேதிக்குள் ஆதார் எண் வழங்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும்
என்றும் இந்த நிறுவனங்கள் எச்சரித்தன. இந்நிலையில், அரசின் எந்த
திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச
நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.
அப்போது மத்திய அரசு தரப்பில், ‘ஆதார் எண் கட்டாயம் என்பதற்கான காலக்கெடுவை
2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக’ உறுதி அளித்தது. ஆனால், ஆதார்
எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உட்பட
அனைத்து மத்திய அரசு நிறுவனங்களும், மாநில அரசு நிறுவனங்களும் வலியுறுத்தி
வருகின்றன. அதற்கு ஏற்ப, ஆதார் எண்ணை இணைக்காத வாடிக்கையாளர்களின்
எரிவாயு இணைப்பை துண்டித்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி முகவர்களிடம்
கேட்டால், ‘ஆதார் எண் கொடுத்தால் ஒரு வாரத்தில் மீண்டும் இணைப்பு
புதுப்பிக்கப்படும்’ என்று சொல்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...