டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களும் நாட்டின் பணக்கார மாநிலங்கள் என்று தேசிய குடும்பநல சுகாதார ஆய்வு-4 கூறுகிறது.
இந்த ஆய்வறிக்கையில், “டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களும் நாட்டின் முதன்மையான பணக்கார மாநிலங்களாக விளங்குகின்றன. இந்த இரு மாநிலங்களிலும் வாழும் 60 சதவிகித மக்கள் சொந்த வீடு வைத்துள்ளனர். அதேபோல ஜெயின் சமூகத்தினர் நல்ல வளமுடன் இருக்கின்றனர். இவர்களில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் சொந்த வீடு வைத்துள்ளனர்.
நாட்டின் பின்தங்கிய மாநிலமாக பீகார் உள்ளது. இந்த மாநிலத்தில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு சொந்த வீடு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. சொந்த வீடு, தொலைக்காட்சி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நுகர்வோர் பொருள்கள், குடிநீர் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆய்வு 2015-16ஆம் நிதியாண்டில் சுமார் 6 லட்சம் குடும்பங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் முழு தகவல்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்துகளும், முஸ்லிம்களும் கிட்டத்தட்ட சமமான வளங்களுடன் வாழ்வதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...