மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, மாற்று திறனாளிகள்,
பிப்., 5க்குள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மாற்று திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில், ஆண்டு தோறும், மாற்று திறனாளிகளுக்கு, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பங்கேற்போர், தேசிய, சர்வதேச மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதி போட்டியாக அமைகிறது.
இந்த ஆண்டிற்கான போட்டிகள், பிப்., 10, காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள, நேரு விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, தமிழகம் முழுவதும் விருப்பம் உள்ள, மாற்று திறனாளி விளையாட்டு வீரர்கள், பிப்., 5க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை, www.tndfctrust.com என்ற இணைய தளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு, அமைப்பின் நிர்வாகிகள், பொன்னுசாமியை, 96001 93360; விளையாட்டு போட்டி பொறுப்பாளர், சந்திரகுமாரை, 98403 05804 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...