கற்றல் குறைபாடுகள் உள்ள
குழந்தைகளுக்கு லண்டனில் உள்ளது போல் தமிழகத்திலும் பயிற்சி அளிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வரும் பிப்ரவரி மாதம் முதல் அரசு நூலகங்களில் ஐ.ஏ.எஸ் பயிற்சி வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள 314 முழுநேர நூலகங்கள் 2 கோடி ரூபாய் செலவில் கணினிமயமாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோபிச்செட்டிபாளையம் பாரியூரில் இன்று (ஜனவரி 14) தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாமை திறந்து வைத்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் இம்மாத இறுதிக்குள் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி முகாம்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்படும் என்று கூறினார்.
மேலும் கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு லண்டனில் உள்ளது போல் தமிழகத்திலும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...