போலி
சான்றிதழ்களை முற்றிலும் களையெடுக்கும் வகையில், மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை, 'டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம்' திட்டத்தை
செயல்படுத்தி உள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கீழ், பல்கலை மானியக் குழுவின் நேரடி கட்டுப்பாட்டில், 'டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம்' செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதில், நாடு முழுவதுமுள்ள, 359 மாநில பல்கலைகள், 123 நிகர்நிலை, 47 மத்திய மற்றும் 260 தனியார் பல்கலைகள், 12 மத்திய நிதி உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், 55 வகையான பாடத் திட்டங்களின் கீழ் செயல்படும் பள்ளிகள் இணைக்கப்பட உள்ளன.
இதன் மூலம், பட்டம், பட்டயம், ஆராய்ச்சி, தகுதித் தேர்வுகள், மதிப்பெண் உள்ளிட்ட, அனைத்து வகை சான்றிதழ்களும், டிஜிட்டல் முறையில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், பிரத்யேக பதிவு எண் வழங்கப்படும். இதன் மூலம், சான்றிதழ்களை எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், தொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் சமயங்களில், சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை எளிதாக அறிந்து கொள்ளலாம். டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம் பதிவு, பராமரிப்பு, பதிவிறக்கம் போன்ற செயல்பாடுகளுக்கு, அதற்கேற்ப கட்டணங்களை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. மாணவர்கள், 27 வயது வரை, இச்சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.பல்கலைகளில், இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு, மாணவர்களின் தகவல்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...