தொலைத் தொடர்புத் துறை பணியிழப்புகள் எண்ணிக்கை அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் 80 ஆயிரம் முதல் 90 ஆயிரத்தை எட்டும் என்று ஆய்வறிக்கைகள் அதிர்ச்சியூட்டும் தகவல்களைக் கூறியுள்ளன.
இது குறித்து திங்கட்கிழமை வெளியிடப்பட்ட (ஜனவரி 15) சி.ஐ.இ.எல். ஹெச்.ஆர் சர்வீசஸ் ஆய்வறிக்கையில், "அண்மைக் காலமாக தொலைத் தொடர்புத் துறை மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இத்துறையில் கடுமையானப் போட்டி நிலவுவதால் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாய் இழப்பு அதிகரித்துள்ளது. இதனால் இத்துறையில் பணியிழப்புகள் அதிகரித்துள்ளன.
2017ஆம் ஆண்டில் தொலைத் தொடர்புத் துறையில் 40,000 பணியிழப்புகள் வரை ஏற்பட்டுள்ளன. பணியிழப்புகள் மேலும் 6-8 மாதங்களுக்குத் தொடரும். மேற்கொண்டு 40,000 முதல் 50,000 பணியிழப்புகள் அடுத்த 6-8 மாதங்களுக்கு ஏற்படும். அதிகபட்சமாக தொலைத் தொடர்புத் துறையின் பணியிழப்புகள் 90,000ஆக இருக்கும்" என்று கூறியுள்ளது.
இந்த ஆய்வறிக்கை குறித்து பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித்ய நாராயண் மிஸ்ரா பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "தொலைத் தொடர்புத் துறையில் நிலவும் நெருக்கடிகளால் அடுத்த இரண்டு முதல் மூன்று காலாண்டுகளுக்கு பணியிழப்புகள் தொடரும். இதன் எண்ணிக்கை 80,000 முதல் 90,000 ஆக இருக்கும்" என்றார்.
இந்த ஆய்வு 65 தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பணிபுரிகின்ற 100 மூத்த மற்றும் இடைநிலை ஊழியர்களிடம் நடத்தப்பட்டது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...