ஆசிரியர் வகுப்பில் வருகை பதிவேட்டில் மாணவர்களின் வருகையை பதிவு செய்து கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு
மாணவி தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார். ஏன்,அந்த மாணவி
வரவில்லை என ஆசிரியர் கேட்டபோது, அவள் ஏற்கனவே பள்ளியை விட்டு
நின்றுவிட்டாள் என மற்றொரு மாணவி பதிலளித்தாள்.
இப்படிதான், அந்த வகுப்பில் ஒவ்வொரு மாணவியும் படிப்பை பாதியிலே விட்டு செல்கின்றனர். இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், பருவமடைந்த பெண்களின் முதல் மாதவிடாயின்போது பெரும்பாலான மாணவிகள் நின்று விடுகிறார்கள். இதுபோன்று, அந்த கிராமத்தில் 113 மாணவிகள் படிப்பை பாதியில் விட்டுள்ளனர்.
இதனால்,ஜங்கல்மஹாலை சேர்ந்த பழங்குடி பெண் பஹமோனி, மாதவிடாய் குறித்து மக்களிடம் நிலவி வரும் பழமையான கருத்துக்களை உடைக்க போராடி வருகிறார்.
ஒரு ஆய்வில் இந்தியாவில்,335 மில்லியன் பெண்கள் மட்டுமே மாதவிடாயின்போது நாப்கின் பயன்படுத்துகின்றனர். 23 சதவிகித இளம்பெண்கள் பருவமடைந்த பின் பள்ளி படிப்பை நிறுத்தி விடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் தாண்டி, படிக்கும் மாணவிகள் மாதத்தில் ஐந்து நாட்கள் விடுமுறை எடுத்து விடுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என பஹமோனி நினைத்தார்.
ராஜ்நகர் கல்லூரியில் இவருடைய போராட்டம் வார்த்தைகளால் வெளிபடுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. காது கேட்கும் திறன் அற்ற பஹமோனி மாவட்ட நீதிபதியை சந்தித்து,ராஜ்நகர் கல்லூரில் நாப்கின் வழங்கும் இயந்திரத்தை நிறுவ வேண்டும் என கேட்டு கொண்டார்.
பஹமோனி கிராமத்தில் 132 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு, குழந்தை திருமணத்தை ஒரளவுக்கு ஒழிக்க முடிந்தது. இப்போது, மாதவிடாயின்போது சுகாதாரம் பேணுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பஹமோனி போராடி வருகிறார்.
இந்த மாணவியின் நடவடிக்கையை உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று பாராட்டியுள்ளது. தொண்டு நிறுவனம் மாதவிடாய் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளித்ததன் மூலம் பள்ளி படிப்பை விட்ட 113 மாணவிகளில், 9 பேர் மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்.
9 என்ற எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும், இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...